தமிழ்நாடு

கம்பம் ஒன்றியத்தில் கிராமநல சுற்றுப்புற சுகாதார சத்துணவுக்குழுக்கள் அமைப்பு

20th Nov 2020 04:21 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்தில் உள்ள 5 ஊராட்சிகளில் கிராமநல சுற்றுப்புற சத்துணவு குழுக்கள் அமைப்பதற்கான பயிற்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் கிராமநல சுற்றுப்புற சுகாதார சத்துணவு குழுக்கள் அமைக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஒன்றியக்குழுத்தலைவர் பழனிமணி கணேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரா.தங்கராஜ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா வரவேற்றுப் பேசினார். 

வட்டார மருத்துவ அலுவலர் பி.முருகன் பேசும் போது, 

ADVERTISEMENT

ஊராட்சி பகுதிகளில் கிராம நலச் சுற்றுப்புற சுகாதார சத்துணவு குழுக்கள் அமைக்க வேண்டும், குழுவிற்கு ஊராட்சி தலைவர் தலைவராகவும், கிராமப்புற செவிலியர் உறுப்பினர் செயலராகவும், வார்டு உறுப்பினர்கள் மகளிர் குழுவினர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உறுப்பினர்களாக கொண்ட குழுவை ஏற்படுத்த வேண்டும், இவர்கள்  திறந்த வெளி கழிப்பறை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும், மக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், மக்களின் பங்களிப்பையும் பெற வேண்டும் என்றார்.  

கூட்டத்தில் ஊராட்சித்தலைவர்கள் அ.மொக்கப்பன், நாகமணி வெங்கடேசன், சாந்திபரமன், பொன்னுத்தாய் செல்லையா, பொன்னுத்தாய் குணசேகரன் மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT