தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை, சண்முகா நதி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து குறைந்தது

20th Nov 2020 01:14 PM

ADVERTISEMENT


உத்தமபாளையம்: வடகிழக்கு பருவமழை கடந்த இரு தினங்களாக குறைந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை மற்றும் சண்முகா நதி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து குறைந்தது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் தொடர் சாரல் மழையும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை மற்றும் சண்முகா நதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

ஆனால் வெள்ளிக்கிழமை காலை முதல் மழைப்பொழிவு சற்று குறைந்தது.

ADVERTISEMENT

இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 4,822 கன அடியிலிருந்து 4,688 ஆக குறைந்தது.

அதேபோல சண்முகா நதி நீர்த் தேகத்திற்கு 252 கன அடியிலிருந்து 78 அடியாக குறைந்தது.

நீர் திறப்பு அதிகரிப்பு: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1355 கன அடியிலிருந்து 1511 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags : Mullaiperiyar Dam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT