தமிழ்நாடு

ஓமலூரில் கிரிக்கெட் விளையாடிய எம்எல்ஏ - தொண்டர்கள் மகிழ்ச்சி

20th Nov 2020 01:20 PM

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் ஓமலூரில் இளைஞர்கள் குழு நடத்திய கிரிக்கெட் போட்டியை தொடங்கிவைத்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் கிரிக்கெட் விளையாடியது அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஓமலூர் பகுதி இளைஞர்கள் குழு சார்பில் 6 ஓவர் கிரிக்கெட் போட்டி ஓமலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஓமலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழக ரஞ்சி கோப்பை அணி முன்னாள் வீரர் வெற்றிவேல் இந்த போட்டிகளை தொடங்கி வைத்து கிரிக்கெட் விளையாடினார். முன்னாள் கிரிக்கெட் வீரரான அவர் மீண்டும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

6 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

ADVERTISEMENT

தொடக்கவிழாவில் ஓமலூர் நகர அதிமுக செயலாளர் சரவணன் தெற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எஸ்.ஆர்.தளபதி, இணைச் செயலாளர் ராகுல், சிறுபான்மை பிரிவு தலைவர் பாபு ஐ.டி.விங்க் நிர்வாகிகள் மற்றும் பிரசாத் மற்றும் ரஷீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : MLA played cricket Omalur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT