தமிழ்நாடு

லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ஜான் பாண்டியன் ஆறுதல்

20th Nov 2020 02:26 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி: லடாக்கில் நடந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் ஆறுதல் தெரிவித்தார். 

கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் கருப்பசாமி(34). கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில், வியாழக்கிழமை லடாக் பகுதியில் நடந்த விபத்தில் பலியானார். 

இதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் சென்று, இல்லத்தின் முகப்பில் உள்ள கருப்பசாமியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  

தொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், வீரமரணமடைந்த கருப்பசாமிக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறோம். அவரது குழந்தைகளும் நன்கு படித்து அவர்களும் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்றார் அவர்.

ADVERTISEMENT

Tags : தூத்துக்குடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT