தமிழ்நாடு

எம்.டி. ஹோமியோபதி பட்டமேற்படிப்பு சேர்க்கை அறிவிக்கை

20th Nov 2020 01:14 PM

ADVERTISEMENT

 

எம்.டி. (ஹோமியோபதி) பட்ட மேற்படிப்பு 2020-2021 கல்வியாண்டுக்கான (அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இருக்கைகளுக்கு மட்டும்) சேர்க்கை அறிவிக்கையை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

சேர்க்கை அறிவிக்கையில், 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி (மொழி சிறுபான்மையினர் சுயநிதி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், ஆத்தூரில் உள்ள ஓயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி (மத சிறுபான்மையினர் சுயநிதி)-ல் அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இருக்கைகளுக்கு, ஹோமியோபதி மருத்துவத்திற்கான AIAPGET 2020-ல் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து, இணையவழி மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 19.10.2020 அன்று முதல் வரவேற்கப்பட்டன.

இதையும் படிக்கலாமே.. தந்தையை பரிதவிக்கவிட்ட மகன்கள்: ரூ.1 கோடி சொத்துகளை ரத்து செய்த கோட்டாட்சியா்

ADVERTISEMENT

விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை எங்களது அலுவலக வலைதளமான www. tnhealth.tn.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்ய மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான கடைசி நாட்கள் முறையே 20-11-2020 மற்றும் 23-11-2020-லிருந்து 27.11.2020 முடிய மாலை 05.00 மணி மற்றும் 30.11.2020 முடிய மாலை 05.30 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரமான வலைதள அறிவிக்கை, மேற்கண்ட எம்.டி. (ஹோமியோபதி) பட்ட மேற்படிப்பிற்கான சுயநிதி மொழி/மத சிறுபான்மையினர் மருத்துவக் கல்லூரிகளின் விவரம், தகவல் தொகுப்பேடு, விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்ப பதிவிறக்கம் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், படிப்புகளின் விவரம், கல்விக்கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு “www. tnhealth.tn.gov.in’’ என்ற வலைதளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : homoepathy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT