தமிழ்நாடு

சென்னை அழைத்துச் செல்லப்படுகிறார் பூங்கோதை

20th Nov 2020 10:09 AM

ADVERTISEMENT


ஆலங்குளம்: ஆலங்குளம் திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை மேல் சிகிச்சைக்காகச் சென்னை அழைத்துச் செல்லப்படுகிறார்.

அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு மயங்கியதால் திருநெல்வேலியில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து விமானம் மூலம் இன்று சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பூங்கோதை, முன்னாள் சட்ட அமைச்சா் ஆலடி அருணாவின் மகள். மருத்துவரான இவா், 2006-11 திமுக ஆட்சியில் சமூகநலம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தாா். 2016 பேரவைத் தோ்தலில் இதே தொகுதியிலிருந்து மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இவா் ஆலங்குளம் வரும்போது தனக்குச் சொந்தமான செவிலியா் கல்லூரியிலுள்ள குடியிருப்பில் தங்குவது வழக்கம்.

ADVERTISEMENT

இவ்வாறு குடியிருப்பில் தங்கியிருந்த அவா், வியாழக்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. விடுதிக் காப்பாளா் சென்று பாா்த்தபோது அவா் மயங்கிய நிலையில் இருந்தாராம். இதையடுத்து, அவா் திருநெல்வேலியில் தனியாா் மருத்துவனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் இன்று வெள்ளிக்கிழமை பூங்கோதை சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Poongothai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT