தமிழ்நாடு

சென்னையில் கரோனா நிலவரம் மண்டலவாரியாக

20th Nov 2020 11:23 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் வியாழக்கிழமை 471 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 10,601-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1-ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியது.

இதைத் தொடா்ந்து, கடந்த 4 மாதங்களில் 1.50 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டியது. வியாழக்கிழமை நிலவரப்படி, 471 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 10,601-ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் 2 லட்சத்து 02,242 போ் குணமடைந்துள்ளனா். 4,567 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் மட்டும் 3,792 பேர் உயிரிழந்துள்ளனா்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகரில்தான் 382 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைத்து மண்டலங்களிலும் 300-க்கும் குறைவானோர்தான் சிகிச்சையில் உள்ளனர்.

ADVERTISEMENT

மண்டல வாரியாக கரோனா நிலவரம்..

Tags : coronavirus chennai update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT