தமிழ்நாடு

அதிமுக தேர்தல் பணிக்குழுவுக்கு கூடுதல் உறுப்பினர்கள் நியமனம்

20th Nov 2020 09:36 PM

ADVERTISEMENT

அதிமுக தேர்தல் பணிக்குழுவுக்கு கூடுதலாக 2 உறுப்பினர்களை நியமித்து கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், முன்னாள் எம்பி, இரா. கோபாலகிருஷ்ணன், தேர்தல் பிரசாரக் குழுவில் எம்.எல்.ஏ., கி.மாணிக்கம் இன்று முதல் உறுப்பினர்களாக இணைந்து செயல்படுவார்கள். 

கட்சித் தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக்கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Tags : ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT