தமிழ்நாடு

சீர்காழி பழையாறு கடற்கரையில் கரையொதுங்கிய திமிங்கிலம்

17th Nov 2020 11:17 AM

ADVERTISEMENT

 

சீர்காழி அடுத்த பழையாறு கடற்கரையில் இன்று காலை அழுகிய நிலையில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு கடற்கரையில், இன்று காலை இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதைப் பார்த்த கிராம மக்கள், கடலோர காவல்படைக்கு தகவல் அளித்தனர்.

ADVERTISEMENT

அவர்கள் விரைந்து வந்த திமிங்கலத்தின் உடலை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இறந்து கரையொதுங்கிய திமிங்கிலம், நான்கு டன் எடையுடன் 12 அடி நீளம் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திமிங்கிலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT