தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் இருசக்கர வாகனங்கள் ஏலம்: மாவட்ட காவல்துறை

17th Nov 2020 12:30 PM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு குற்றவியல் நடவடிக்கைகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் வரும் 20 ஆம் தேதி ஏலத்துக்கு விடப்படுவதாக மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன் உத்தரவின்பேரில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளின் கீழ் குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 102-ன் படி கைப்பற்றப்பட்ட 573 வாகனங்கள் அதன் விவரங்கள் மற்றும் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் மூலம் அகற்றுதல் குறித்து விரிவான அறிக்கை மாவட்ட அரசிதழில் ந.க.பி1/2085/2020-ன் படி 29.6.2020 அன்று வெளியிடப்பட்டது. 

அதில் 557 வாகனங்களை இதுவரை யாரும் உரிமை கோராததால் மாவட்ட ஆட்சியரால் அரசுடமையாக்கப்பட்டது. மேற்படி வாகனங்களில் பொது ஏலம் வருகிற 20.11.2020 ஆம் தேதி காலை 11.00 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. 

ADVERTISEMENT

17.11.2020 முதல் 19.11.2020 வரை வாகனங்களை பார்வையிடவும், ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் 19.11.2020ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ரூ.25,000/- முன்வைப்பு தொகை செலுத்தி தங்களது பெயர் விலாசத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். 20.11.2020 அன்று காலை 11.00 மணியிலிருந்து பொது ஏலம் நடைபெறும். மேலும், ஏலம் எடுப்பவர்கள் தங்களுடைய குடும்ப அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், ஏலம் எடுத்தவர்கள் ஏலத் தொகையுடன் GST தொகையினையும் சேர்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றுகளுடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : Ranipet
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT