தமிழ்நாடு

நாடகக் கலைஞர்களுக்கு அரசுப் பேருந்துகளில் சலுகை: தமிழக அரசு அறிவிப்பு

17th Nov 2020 04:46 PM

ADVERTISEMENT

 

சென்னை: மாநிலம் முழுவதும் நாடகக் கலைஞர்களுக்கு அரசுப் பேருந்துகளில் சிறப்பு சலுகைகளை வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக செவ்வாயன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மாநிலம் முழுவதும் நாடகக் கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.

அதாவது அவர்களது இசைக்கருவிகள், கலைப்பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்திய கருவிகள் போன்றவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT