தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரி இப்போதைக்கு திறக்கப்படாது: பொதுப்பணித் துறை

17th Nov 2020 10:42 AM

ADVERTISEMENT


சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி இப்போதைக்கு திறக்கப்படாது என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வந்ததால், 2015-ஆம் ஆண்டைப் போல செம்பரம்பாக்கம் அணை நிரம்பி, திறக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப் பணித் துறை அதிகாரிகள் இன்று காலை நேரில் ஆய்வு செய்தனர்.

இதையும் படிக்கலாமே.. ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வயது 356!

ADVERTISEMENT

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொதுப் பணித் துறையின் தலைமை பொறியாளர்  அசோகன், 2015-ஆம் ஆண்டு பெய்ததைப் போல சென்னையில் தற்போது கனமழை பெய்யவில்லை.  மழை பெய்து கொண்டிருந்த போது செம்பரம்பாக்கம் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது மழை குறைந்ததால், நீர்வரத்தும் குறைந்துவிட்டது. செம்பரம்பாக்கத்துக்கு தற்போது 450 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிக்கலாம்.. மாற்று சக்தியாகுமா மக்கள் நீதி மய்யம்?

செம்பரம்பாக்கம் ஏரி தற்போதைக்கு திறக்கப்படாது. அதே வேளையில், ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டு பிறகுதான்  செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : lake
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT