தமிழ்நாடு

காடையம்பட்டியில் ரூ.3 கோடி வளர்ச்சி பணிகள் தொடக்கம்

17th Nov 2020 02:53 PM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ் வெற்றிவேல் இன்று தொடங்கி வைத்தார். 

வேப்பிலை ஊராட்சியில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி உம்பிளிக்கம்பட்டி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 50 லட்ச ரூபாய் மதிப்பில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தினை சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் ரவி, துணைத் தலைவர் மகேஸ்வரி வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியம், சேரன் செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT