தமிழ்நாடு

தரைப் பாலத்திற்கு மேல் செல்லும் மழை நீர்: எறையூர்-வல்லக்கோட்டை இணைப்புச் சாலை துண்டிப்பால் மக்கள் அவதி

17th Nov 2020 11:49 AM

ADVERTISEMENT

 

கனமழை காரணமாக எறையூர் தேவனேரி ஏரியிலிருந்து வெளியேறும் அதிகப்படியான உபரிநீரால் எறையூர்-வல்லக்கோட்டை இணைப்புச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட எறையூர் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேவனேரி ஏரி உள்ளது. சுமார் நூறு ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரி கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த திங்கள்கிழமை  முழுவதுமாக நிரம்பியதால் கலங்கள் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை மாலை வரை கனமழை பெய்ததால், எறையூர் தேவனூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால், ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரின் அளவும் அதிகரித்தது. 

இதனால் எறையூர் பகுதியில், எறையூர்-வல்லக்கோட்டை இணைப்புச்சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதோடு தரைப்பாலத்தில் இருந்து சுமார் மூன்று அடி உயரத்திற்கு மழைநீர் செல்வதால் வல்லக்கோட்டை-எறையூர் இணைப்புச்சாலையில் திங்கள்கிழமை இரவு முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 

இதனால் இச்சாலையைப் பயன்படுத்தும் எறையூர் பகுதி பொதுமக்கள் வல்லக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்குச் சுற்றிவர வேண்டியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT