தமிழ்நாடு

வட கிழக்கு பருவ மழை எதிரொலி: சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

17th Nov 2020 12:34 PM

ADVERTISEMENT


கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் புகழ் பெற்றது சுருளி மலையில் உள்ள சுருளி அருவி. வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வரும் நிலையில், அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சுருளி அருவிக்கு நீ்ரவரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய நீர்வரத்து ஓடைகளில் மழை நீர் வரத்தொடங்கியுள்ளது. 

இதையும் படிக்கலாம்.. மாற்று சக்தியாகுமா மக்கள் நீதி மய்யம்?

இதனால் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது பொது முடக்கம் காரணமாக சுருளி அருவிப்பகுதியில் பக்தர்கள், சுற்றுலாப்யணிகள் வருவது தடைசெய்யப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் இல்லை. மேலும் அருவிப்பகுதியில் ஏற்படும்  நீர் வரத்தை கிழக்கு வனச்சரகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

Tags : Suruli Falls
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT