தமிழ்நாடு

என்.எல்.சி. விபத்தில் தொழிலாளி பலி

17th Nov 2020 09:13 AM

ADVERTISEMENT


நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி, 21-ஆவது வட்டத்தில் வசித்து வந்தவர் ராமசாமி மகன் சக்திவேல்(52). இவர் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் இண்கோசர்வ் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

திங்கள்கிழமை இரவு இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 6-ஆவது அலகில் பணியாற்றியபோது நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட்டில் கை சிக்கி பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக ரத்தப்போக்கு காரணமாக அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT