கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுது நீக்கும் மையங்கள் செயல்படுகின்றன.
இத்தகைய நிலையில், சென்னை சாலையில் மையப்பகுதியில் கிருஷ்ணகிரி வட்டச் சாலையிலிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலை வரையில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையின் மையப்பகுதியில் தடுப்பு அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டனர்.
சாலையின் மையப்பகுதியில் தடுப்பு சுவர் அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி வாகன பழுது நீக்குவோர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இந்தநிலையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்கியதை அடுத்து சென்னை சாலையில் பெரிய மாரியம்மன் கோவில் அருகே சாலையின் குறுக்கே லாரியை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார். காவல்துறையினரின் சமாதானத்தை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.