தமிழ்நாடு

திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் குடும்ப அரசியல் குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? கார்த்தி சிதம்பரம் கேள்வி

17th Nov 2020 04:30 PM

ADVERTISEMENT

 

சென்னை: திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் குடும்ப அரசியல் குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? என்று காங்கிரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேள்வி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் சூழலை கணிக்க முடியாது

ADVERTISEMENT

பீகார் நிலவரம் வேறு, தமிழக நிலவரம் என்பது வேறு; வரும் தேர்தலில் திமுகவை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்துவோம்

எதிர்க்கட்சிகள் கண்டு அஞ்சுவதற்கு பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஒன்றும் சர்வாதிகாரி அல்ல.

குடும்ப அரசியல் குறித்து காங்கிரசிடம் மட்டும் தொடர்ந்து கேள்வி எழுப்புவது ஏன்?

திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் குடும்ப அரசியல் குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்?

பல மாநிலங்களில் முக்கிய தலைவர்களின் வாரிசுகளே அடுத்தடுத்து பதவிகளுக்கு வருகின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT