தமிழ்நாடு

வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி: திமுக கூட்டத்தில் தீர்மானம்

17th Nov 2020 04:54 PM

ADVERTISEMENT

 

வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி மேற்கொள்வது என திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குமார்முருகேஸ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் முத்துசாமி சிறப்புரையாற்றினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் அனைத்து ஒன்றிய, மாநகர பகுதிகளில் செயல்வீரர் கூட்டம் நடத்துவது, வாக்காளர் சிறப்பு முகாம்களில் நிர்வாகிகள் கலந்துகொண்டு புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கம் செய்தல் பணிகளை மேற்கொள்வது, வாக்காளர் பட்டியலை வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பது, மாவட்ட, மாநகர, வார்டு கழக நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திட்டங்கள், குறைகள் உள்ளிட்ட விபரங்களைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்கும் வகையில் தொகுத்து மாவட்ட அலுவலகத்தில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கந்தசாமி, சச்சிதானந்தம், சந்திரகுமார், அருட்செல்வன், குறிஞ்சி சிவக்குமார், மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், செல்லப்பொன்னி, பழனிசாமி, பிரகாஷ், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், திண்டல்குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT