தமிழ்நாடு

சூலூர் அருகே இருசக்கர வாகனத்துடன் கார் மோதல்: ஒருவர் பலி

17th Nov 2020 06:09 PM

ADVERTISEMENT

 

சூலூர் அருகே சிந்தாமணிப்புதூர் எல்என்டி புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற சாலை விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். 

கேரள மாநிலம் திருச்சூர் பழுவில் பகுதியைச் சேர்ந்த ஜான் ஆண்டனியின் மகன் சிபி புளோகரன் (55). இவர் திருப்பூரில் உள்ள தனியார் கார்மெண்ட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். தீபாவளி விடுமுறைக்கு தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு திருச்சூரிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை திருப்பூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். 

அப்போது சிந்தாமணி புதூர் அருகே எல்என்டி புறவழிச்சாலையில் ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி அருகே வந்தபோது கல்லூரிக்கு உணவுத்துறை தலைவரான ஷகிலா பானுவை கோவை வெங்கடாபுரத்திலிருந்து இடையார் பாளையத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவரது மகன் பிரத்தீஸ்வரன்(21) தனது காரில் அழைத்து வந்த போது திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த திருச்சூரை சேர்ந்த புளோகரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ADVERTISEMENT

காரில் அமர்ந்திருந்த கல்லூரி உணவுத் துறைத் தலைவர் ஷகிலா பானு தலையில் பலத்த காயமடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு வந்த கோவை கிழக்கு போக்குவரத்து காவல்துறையினர் புளோகரன் உடலை உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி புளோகரன் பணிபுரியும் நிறுவனத்தின் மூலம் அவரது வீட்டுக்குத் தகவல் அளித்தனர்.

கோவை கிழக்கு போக்குவரத்து காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து கோவை கணபதி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு  மாணவரான பிரத்தீஸ்வரனை கைது செய்தனர்.
 

Tags : accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT