தமிழ்நாடு

முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட பகுதியில் விலங்குகள் கணக்கெடுப்பு

17th Nov 2020 12:51 PM

ADVERTISEMENT

 

கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளி வட்டப் பகுதிகளில் பருவ மழைக்குப் பிந்தய வன உயிரினங்கள் கணக்கெடுப்புப் பணி  தொடங்கியது.

முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி வட்டப் பகுதி மசினகுடி, சிங்காரா, சீகூர்,தெங்குமரஹடா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 349 ச.கி.மீ. பரப்பில் துணை கள இயக்குநர் ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் இன்று காலை தொடங்கியது.

தேர்வு செய்யப்பட்ட 37 நேர்கோடுகளில் 37  குழுக்களாக பிரிந்து நூற்றுக்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நேரடி காட்சிகள், கால்தடங்கள், விலங்குகளின் எச்சங்கள், நகக் கீரல்கள் மற்றும் தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள், ஊர்வன, பறப்பன மற்றும் தாவர வகைகளி தடயங்களுடன் சேகரிக்கும் புள்ளி விவரங்களை தேசிய புலிகள் காப்பக ஆணையத்திற்கு அனுப்பப்படும் என்று வனச் சரக அலுவலர் காந்தன் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT