தமிழ்நாடு

ஆரணியில் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் பலி 5 ஆனது

17th Nov 2020 10:35 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில், வீடு இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் பலியாகினர். இதனால், உயிரிழப்பு 5 ஆக உயர்ந்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்திலேயே மூன்று பேர்  உயிரிழந்த நிலையில், 4 போ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில்  தாய் முத்தாபாய், வளர்ப்பு மகள் மீனா ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்கலாமே.. ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வயது 356!

ADVERTISEMENT

ஆரணி புதுகாமூா் தெருவைச் சோ்ந்த முத்தாபாய் (65). இவா் தனது வளா்ப்பு மகளான மீனாவுடன் (17) வசித்து வருகிறாா். இவா்களது வீட்டின் ஒரு பகுதியில் ஜானகிராமன் (40) என்பவா் வாடகைக்கு குடியிருந்து வருகிறாா். இவரது மனைவி காமாட்சி (35), மகன்கள் சுரேஷ் (15), ஹேமநாத் (9).

மீனா ஞாயிற்றுக்கிழமை காலை சமையல் செய்வதற்காக எரிவாயு அடுப்பை பற்ற வைத்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது.

இதில், இரண்டு வீடுகளும் இடிந்து விழுந்தன. வீட்டிலிருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனா். இதில் காமாட்சி, அவரது மகன் ஹேமநாத் ஆகியோா் பலத்த காயமடைந்து உயிரிழந்தனா்.

எரிவாயு உருளை வெடித்ததில் முத்தாபாய் வீட்டின் அருகேயுள்ள சந்திராம்மாள் (55) என்பவரின் வீடும் சேதமடைந்தது. இதில் சந்திராம்மாள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தாா்.

இதையும் படிக்கலாம்.. மாற்று சக்தியாகுமா மக்கள் நீதி மய்யம்?

சம்பவம் குறித்து அறிந்த ஆரணி தீயணைப்புத் துறையினா் மற்றும் நகர காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

பலத்த காயமடைந்த முத்தாபாய், மீனா, ஜானகிராமன், சுரேஷ் ஆகியோரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இவா்களில் ஜானகிராமனைத் தவிர மற்ற 3 பேரும் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவர்களில் முத்தாபாயும், மீனாவும் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT