தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் கழுத்தறுத்து கொலை

13th Nov 2020 01:43 PM

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எட்டிப்பட்டி அருகே உள்ள முக்கரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி இவரது மகன் திருப்பதி(27). இவர் தனது வீட்டில் இரவு  தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாமல்பட்டி காவலர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சாமல்பட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

இவரது மனைவி மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : krishnagiri murder
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT