தமிழ்நாடு

போடியில் மலைவாழ் பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகள்

13th Nov 2020 05:54 PM

ADVERTISEMENT

 

போடி அருகே, வெள்ளிக்கிழமை, மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடி உட்கோட்டம் குரங்கணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிறைக்காடு மற்றும் மேலப்பரவு மலைக் கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது கரோனா பரவல் காரணமாக மலைவாழ் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்ய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி அறிவுறுத்தினார். அதன் பேரில் போடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜி.பார்த்திபன் சார்பில் மலைவாழ் மக்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இவற்றை காவல் துணை கண்காணிப்பாளர் மலைக் கிராமங்களுக்கே நேரில் சென்று வழங்கி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்தினார். அப்போது மலைக் கிராம மக்கள் காவல்துறைக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT