தமிழ்நாடு

தெலங்கானா ஆளுநர் தீபாவளி வாழ்த்து

13th Nov 2020 05:00 PM

ADVERTISEMENT

தமிழக, தெலுங்கானா மற்றும் அனைத்து இந்திய சகோதர, சகோதரிகளுக்கும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக, தெலுங்கானா மற்றும் அனைத்து இந்திய சகோதர, சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 
இந்த தீபாவளி மகிழ்ச்சியின் வரிசையாகவும், வரிந்துகட்டி வரும் துன்பங்கள் வரிசையாக நாம் வைக்கும் ஒளியில் மறைந்து ஓடவும், கரோனா எனும் கொடிய நோய் நாம் கொண்டாட்டங்கள் மூலம் விலகவும், நாம் வாங்கும் அகல் விளக்குகள், புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப்பொருள்கள் அனைத்தும் நம் மண்ணின் மைந்தர்கள் உழைப்பில் உருவாகும் பொருள்களை வாங்கினால் இந்தியர் அனைவரின் வாழ்வும் ஒளிரும் என்ற பாரதப் பிரதமரின் வரிகளை நினைவு கூர்ந்து நாம் வாங்கும் பொருட்கள் எளிமையான எளியோரின் கொண்டாட்டங்களாகவும் மாறி அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்றும் தீபாவளியாக மலரட்டும். 
சுய சார்பான இந்தியாவை படைக்க ஒளி தரும் தீபாவளியாக இந்த தீபாவளி அமையட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Telangana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT