தமிழ்நாடு

கோம்பையில் தேநீர்க் கடையில் தீ விபத்து

13th Nov 2020 12:03 PM

ADVERTISEMENTஉத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பையில் தேநீர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை மற்றும் வீடுகள் சேதமாகின.

கோம்பை திரு .வி .க தெருவைச் சேர்ந்த மகாராஜா மகன் முத்துக்குமார், உத்தமபாளையம் சாலையில் தனியார் பள்ளி அருகே தேநீர் கடை நடத்தி வருகிறார் . இவரது கடையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பலத்த வெடிச்சத்தம் கேட்டு பொதுமக்கள் சென்று பார்த்தனர். அப்போது முத்துக்குமாரின் கடை தீப்பிடித்து மளமளவென எரிந்து கொண்டிருந்துது. 

இதுகுறித்து கோம்பை காவல் நிலைய காவலர்கள் உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் .

காவல் துறையினர் கொடுத்த தகவலையடுத்து தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

ADVERTISEMENT

தீ விபத்தில் தேநீர் கடை மற்றும் பக்கத்தில் இருந்து உள்ள வீடுகளில் சில சேதமடைந்தது.  

விபத்து குறித்து முதல்கட்ட விசாரணையில்  கடையில் ஏற்பட்டுள்ள மின்கசிவால் ஏற்பட்ட தீயில் சமையல் எரிவாயு உருளை  வெடித்திருக்கலாம் என  தெரியவந்துள்ளது. 

மேலும் கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Tags : Tea shop fire 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT