தமிழ்நாடு

இந்த அரசைப் புறக்கணிக்க மக்கள் தயாராகிவிட்டனர்: ஸ்டாலின்

13th Nov 2020 04:45 PM

ADVERTISEMENT

மக்களுக்கு எதுவும் செய்யாத இந்த அரசைப் புறக்கணிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தி.மு.க. வில் இணையும் நிகழ்ச்சி, காணொலி வழியாக இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

தன்னை ஏதோ ஜெயலலிதா போலவே பழனிசாமி நினைத்துக் கொள்கிறார் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், ஜெயலலிதா சாலையில் பயணம் செய்யும் போதுகூட கடைகளை மூடச் சொல்வது இல்லை. ஆனால்,  தூத்துக்குடி சென்ற பழனிசாமி பயணம் செய்யும் பாதையில் கட்டாயப்படுத்தி கடையை மூட வைத்துள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

இவர் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யமாட்டார் என்பதால் அவரை மக்கள் புறக்கணிக்கத் தயாராகிவிட்டார்கள். அதனுடைய வெளிப்பாடுதான் இணையதளங்கள் மூலமாக திமுகவில் ஏராளமானோர் இணைவது என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT