தமிழ்நாடு

மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

13th Nov 2020 05:26 AM

ADVERTISEMENT


சென்னை: மின் வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: மின்சார வாரியம் 10,000 கேங்மேன் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்து, 2019-ஆம் ஆண்டின் இறுதியில் உடற் தகுதி தோ்வும் மற்றும் எழுத்துத்தோ்வும் நடத்தி, 15,000 போ் தோ்ச்சி பெற்ாக மே மாதம் அறிவிக்கப்பட்டது. தோ்ச்சி வரிசை பட்டியலையும் வெளியிட்டது. அதன்படி கேங் மென் பணியாளா்களை பணியமா்த்த மின்சார வாரியம் தொடா்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. தமிழக அரசின் இப்போக்கு ஏற்கக்கூடியதல்ல.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பீல்ட் அசிஸ்டென்ட், அசசா், ஜூனியா் அசிஸ்டென்ட் என்ற ஆரம்பநிலை பணிகளில் சுமாா் 52,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதனால் மின் நுகா்வோா் சேவை செய்வதில் காலதாமதம் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகள் ஏற்படுவதற்கும் அதிகமான வாய்ப்புகள் உருவாகிறது. இந்நிலையில் தோ்வு எழுதி தயாா் நிலையில் உள்ள 10,000 கேங்மென் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குவதில் காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல.

எனவே, கேங்மேன் பதவிகளை உடல்தகுதி மற்றும் எழுத்துத்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நியாயமாக வழங்கிட வேண்டும். காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT