தமிழ்நாடு

இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்: மனுத்தாக்கல் தொடங்கியது

13th Nov 2020 03:29 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிச.8-ல் நடைபெறுகிறது.

தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார்டு உறுப்பினர், ஊராட்சித்தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்டக்குழு உறுப்பினர் என நான்கு அடுக்காக நடைபெறுகிறது.

தொடுபுழா, கட்டப்பனை ஆகியவை இரண்டு நகராட்சிகள், 8 வட்டங்கள், ஊராட்சிகள் 67, கிராம பஞ்சாயத்துகள் 52 உள்ளன. நவம்பர் 12 மனுத்தாக்கல் தொடங்கி  நவம்பர் 19 வரை மனுத்தாக்கல் நடைபெறுகிறது. நவம்பர் 20-ல் மனுக்கள் பரிசீலனையும், நவம்பர் 23-ல் மனுக்கள் வாபஸ் நடைபெறும்.

ADVERTISEMENT

கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில், உள்ளாட்சித் தேர்தல் டிச.8, 10, 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. நவ.16-ல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகிறது. தற்போதுள்ள உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு வரும். டிச.31-ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடிகிறது. 

புதியதாகப் பொறுப்பேற்கும் உள்ளாட்சி நிர்வாகிகள் 2021-ஆம் ஆண்டு ஜன.1ல் பதவி ஏற்கின்றனர். இடுக்கி மாவட்டத்தில் பீர்மேடு மற்றும் உடும்பன்சோலை தாலுகாக்களில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவில் தமிழர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT