தமிழ்நாடு

பல்லடம் கணபதிபாளையத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரி கைது

13th Nov 2020 08:51 AM

ADVERTISEMENT

 

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் தொழிலாளர் நலத்துறை துணை இயக்குநரிடம் இருந்து ரூ.4,39,500 பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையத்தில் டி.கே.டி. மில் பேருந்து நிறுத்தம் அருகில் தொழிற்சாலைகள் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. அவ்வலுவலகத்திற்கு வியாழக்கிழமை ஆய்வுக்கு வந்த திருப்பூர் 3வது பகுதி தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் தர்மேந்திரா (42) என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனங்களிடமிருந்து தீபாவளி இனாம் வசூலித்து வருவதாக திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. தட்சணமூர்த்தி தலைமையில் காவல் ஆய்வாளர் கெளசல்யா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். 

ADVERTISEMENT

அப்போது தர்மேந்திராவிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.4,39,500 இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் கணபதிபாளையத்தில் தொழிலாளர் நலத்துறை துணை இயக்குநரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு காவலர்கள் விசாரணை நடத்தினர்.

Tags : Labor Welfare Officer arrested கைது
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT