தமிழ்நாடு

ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெறுவது கடினமில்லை: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

13th Nov 2020 03:23 PM

ADVERTISEMENT

 

கருணாநிதியை எதிர்த்துத் தேர்தல் வெற்றிகளைக் கண்ட அதிமுகவுக்கு, ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம் இல்லை என்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார். 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: 

நாகை மாவட்டத்துக்குத் தேவையான அளவு மழை இதுவரை பெய்யவில்லை. விவசாயிகள் மழையை எதிர்நோக்கியுள்ளனர். வடகிழக்குப் பருவமழை கால இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

ADVERTISEMENT

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளும் அதிமுக வசமாகும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுகவை எதிர்த்து வெற்றி பெற்ற அதிமுகவுக்கு, ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம் இல்லை என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT