தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை

13th Nov 2020 11:33 AM

ADVERTISEMENTவங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழக வடமாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மேகம் இருள் சூழ்ந்த நிலையில், மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

விழுப்புரம் சென்னை- திருச்சி நெடுஞ்சாலை பகுதியில் மழையின் இடையே சென்ற வாகனங்கள்.

விழுப்புரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது மழை பெய்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திடீர் மழையால் விழுப்புரம் நகரின் பிரதான வணிக வீதிகளில் பொது மக்கள் வரத்து குறைந்து, தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Heavy rain in Villupuram district
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT