தமிழ்நாடு

கடலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை

13th Nov 2020 10:31 AM

ADVERTISEMENTகடலூர்:  தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை முதல் வடதமிழக கடலோரப் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக் கூடுமென வானிலை மையம் தெரிவித்தது. 

அதன்படி கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரையில் தொடர்ந்து கனமழை பொழிந்து கொண்டே இருக்கிறது. 

காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): கடலூர் - 52, ஆட்சியர் அலுவலகம் - 29.2,  வானமாதேவி - 25.6, குடிதாங்கி - 20. 

கடலூரில் காலை 11 மணி வரையில் 7.5 செ.மீ முதல் 12.5 செ.மீ வரையில் மழை செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கடலூர் வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

ADVERTISEMENT

Tags : Heavy rain Cuddalore district
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT