தமிழ்நாடு

பட்டாசு வெடிக்கச் செல்லும் முன் இதைச் செய்ய வேண்டாம்!

13th Nov 2020 12:41 PM

ADVERTISEMENT


தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக வீடுகளுக்குள் முடங்கியிருந்த பொதுமக்கள், தீபாவளியை நிறைவோடு கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தைத் தவிர பிற நேரங்களில் பட்டாசு வெடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பட்டாசு வெடிக்கச் செல்லும் குழந்தைகளும், பெரியவர்களும் கையில் கிருமிநாசினியைப் பூசிக் கொண்டு பட்டாசு வெடிக்கச் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. சென்னையில் மூவர் சுட்டுக் கொலை: கொலையாளிகளை காரில் துரத்திச் சென்று பிடித்த காவலர்கள்

ADVERTISEMENT

கிருமிநாசினிகள் பெரும்பாலும் ஆல்கஹால் எனும் வேதிப்பொருள் கலக்கப்பட்டிருப்பதாக இருக்கும். எனவே, அது எளிதில் தீ பற்றும் வாய்ப்புள்ளது. எனவே, காவல்துறையும், தீயணைப்புத் துறையும் வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி பொதுமக்கள் பாதுகாப்பான தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல்துறையும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் செய்தியை வெளியிட்டுள்ளது.
 

Tags : Diwali
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT