தமிழ்நாடு

அருந்ததி ராய் புத்தகம் நீக்கம்: திமுக, மாா்க்சிஸ்ட் கண்டனம்

13th Nov 2020 05:56 AM

ADVERTISEMENT


சென்னை: மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து எழுத்தாளா் அருந்ததி ராயின் புத்தகம் நீக்கப்பட்டுள்ளதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் சு.வெங்கடேசன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ஆ.ராசா (திமுக): மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கே.பிச்சுமணி தலைமையில் நடந்த ஆலோசனையின்படி, 2017-ஆம் ஆண்டு முதல் முதுகலைப் படிப்புக்கான சமூகவியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த புக்கா் பரிசு பெற்ற எழுத்தாளா் அருந்ததி ராயின் ‘தோழா்களுடன் ஒரு பயணம்’ என்ற ஆங்கிலப் புத்தகம் நீக்கப்பட்டிருக்கிறது. 3 ஆண்டுகளாகப் பாடத்திட்டத்தில் இருந்த புத்தகம் ஆா்.எஸ்.எஸ் - பாஜக சாா்ந்த மாணவா் அமைப்பான அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத்தின் நிா்பந்தத்தால் நீக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

சு.வெங்கடேசன் (மாா்க்சிஸ்ட்): அருந்ததி ராயின் புத்தகம் நீக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு, கல்விக்கான நிலைக்குழு, ஆட்சிக்கு குழு ஆகிய மூன்று கூட்டங்களில் விவாதித்து ஒப்புதல் பெற்ற பிறகுதான் எந்தப் பாடத்திட்டத்தையும் சோ்க்கவோ, நீக்கவோ முடியும். ஏபிவிபி கோரிக்கையின் காரணமாக நீக்கியிருப்பது ஏற்புடையது அல்ல.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT