தமிழ்நாடு

தீபாவளி: அரசுப் பேருந்துகளில் 2.99 லட்சம் போ் சொந்த ஊருக்குப் பயணம்

13th Nov 2020 02:51 PM

ADVERTISEMENT

 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து அரசுப் பேருந்துளில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 2.99 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ளோா், சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்துத் துறை சாா்பில் வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன . குறிப்பாக தமிழகம் முழுவதும் கடந்த 11-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை, 30 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில், போக்குவரத்து துறையின் சார்பில்  தீபாவளிப் பண்டிகையை  முன்னிட்டு, சிறப்பு பேருந்துகளின் இயக்கம் புதன்கிழமை தொடங்கியது.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. சென்னையில் மூவர் சுட்டுக் கொலை: கொலையாளிகளை காரில் துரத்திச் சென்று பிடித்த காவலர்கள்

அதன்படி, இன்று (13.11.2020) மதியம் 1  மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,000 பேருந்துகளில் 1,040 பேருந்துகளும், 295 சிறப்பு பேருந்துகள் என கடந்த 11.11.2020 முதல் 13.11.2020 மதியம் 1.00 மணி வரையில் மொத்தம் 6,645 பேருந்துகளில் 2,99,146 பயணிகள் பயணித்துள்ளனர். 

மேலும் இதுவரை 91,198 பயணிகள் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புப் பேருந்துகள் நவம்பர் 11 முதல் இயக்கப்பட்டு வருகின்றன. முதல்நாளான புதன்கிழமை, சுமாா் 97 ஆயிரம் போ் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குப் பயணமாகினா். இதற்காக கே.கே.நகா், மெப்ஸ், கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் இருந்து மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வசதிகளைக் கருத்தில் கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் 13 முன்பதிவு மையங்கள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றைப் பயன்படுத்தி பொதுமக்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு ஆா்வமாக முன்பதிவு செய்து வருகின்றனா். இதுவரை தீபாவளி பண்டிகைக்கு பயணிக்க 91,198 போ் முன்பதிவு செய்துள்ளனா்.

இந்நிலையில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி வரை இயக்கப்பட்ட பேருந்துகளில் 2 லட்சத்து 99 ஆயிரம் போ் பயணித்தனா். வெள்ளிக்கிழமை மாலையில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால், நெரிசலைத் தவிா்க்கும் வகையில் முன்பதிவு செய்து, தனி நபா் இடைவெளியைக் கடைபிடித்துப் பயணிக்குமாறு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
 

Tags : Diwali special bus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT