தமிழ்நாடு

நெல்லையில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

13th Nov 2020 10:28 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் வெள்ளிக்கிழமை பெய்த தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், குமரி கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது. இதனால் தென்தமிழக பகுதிகளில் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி மாநகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தொடர் மழை பெய்தது. பின்னர் சிறிது நேரம் இடைவெளி விட்டிருந்த மழை 9 மணிக்குப் பிறகு மிதமான மழையாக தொடர்ந்தது.  

ADVERTISEMENT

பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி நகரம், கொண்டாநகரம், பேட்டை, அபிஷேகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

திருநெல்வேலி நகரத்தில் வெள்ளிக்கிழமை பெய்த மழையில் நனைந்தபடி சென்ற மக்கள்.

தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி, திருநெல்வேலி நகரத்தில் ரத வீதிகள் ஆகியவற்றில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.  

தீபாவளியையொட்டி இறுதி நாளில் பொருள்கள் வாங்க கடைவீதிக்கு குடும்பத்துடன் செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். 

பாளையங்கோட்டை வ.உ.சி. பூங்கா, என்.ஜி.ஓ. காலனி, பேட்டை பகுதிகளில் உள்ள பூங்காக்களில் தண்ணீர் தேங்கின. தீபாவளி விடுமுறைக்காக வெளியூர்களுக்கு பேருந்துகளில் சென்ற பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். 

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம்-42, சேர்வலாறு-34, மணிமுத்தாறு-25, நம்பியாறு-7, அம்பாசமுத்திரம்-29, சேரன்மகாதேவி-26, ராதாபுரம்-6.2, நான்குனேரி-19.5, களக்காடு-55.4, பாளையங்கோட்டை-63, திருநெல்வேலி-11.

Tags : Continuous rain Nellai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT