தமிழ்நாடு

53 ஆண்டுக்குப் பிறகு மன்னார்குடிக்கு சரக்கு ரயில் சேவை தொடக்கம்

13th Nov 2020 06:08 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையத்திலிருந்து கடந்த 1967 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட ரயில் சேவை 53 ஆண்டுக்குப் பின், வட மாநிலத்திலிருந்து சரக்குகள் ஏற்றப்பட்ட சரக்கு ரயில், வெள்ளிக்கிழமை மன்னார்குடி ரயில் நிலையம் வந்தடைந்தது.

மன்னார்குடி - நீடாமங்கலம் அகலப் பாதையில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் போக்குவரத்து நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் சரக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, 1977 ஆம் ஆண்டு பயணிகள் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியிலிருந்த போது, திமுக மக்களவை உறுப்பினராக இருந்த மன்னார்குடியை சேர்ந்த டி.ஆர்.பாலு, ரயில்வே நிலைக்குழுத் தலைவராக இருந்தால் .அவரது பெரும் முயற்சியில் மன்னார்குடி - நீடாமங்கலம் பயணிகள் ரயில் போக்குவரத்து 33 ஆண்டுக்குப் பின் மீண்டும் தொடங்கியது.

ADVERTISEMENT

சரக்கு ரயிலுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

மன்னார்குடி ரயில் நிலையத்திலிருந்து நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும் 2 பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மன்னார்குடி அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் வடமாநிலங்களுக்கும் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வது எளிதானது. இந்நிலையில், மன்னார்குடியில் இருந்து சரக்கு ரயில் போக்குவரத்து சேவையைத் தொடங்க வேண்டும் என்றும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா மத்திய ரயில்வே அமைச்சர், ரயில்வே தலைமை அதிகாரிகளை நேரில் சந்தித்து சரக்கு ரயில் சேவை தொடங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்திருந்தார். இதனை ஏற்று, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மன்னார்குடிக்கு சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்தது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் டிட்டாகர் எனும் இடத்திலிருந்து (நவ. 10) செவ்வாய்க்கிழமை 33 சரக்கு பெட்டிகளுடன் சாக்கு பண்டல் ஏற்றி வந்த சரக்கு ரயில் வெள்ளிக்கிழமை காலை மன்னார்குடி ரயில் நிலையம் வந்தடைந்தது.

சரக்கு ரயிலில் வந்த சாக்கு பண்டல்கள், சுமைப் பணியாளர்கள் மூலம் லாரிகளில் ஏற்றப்படுகிறது.

53 ஆண்டுக்கு பிறகு, முதன்முறையாக மன்னார்குடிக்கு வந்துள்ள சரக்கு ரயில் பெட்டிகளுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து சாக்கு பண்டல்கள் இறக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதில், 120 சுமைதூக்கும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயிலிருந்து இறக்கப்படும் சாக்கு பண்டல்கள் டெல்டா மாவட்டத்தில் உள்ள தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 170 லாரிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த சாக்கு பண்டல்கள் அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் நெல்களை மூட்டையாக கட்டுவதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

மன்னார்குடிக்கு சாக்கு பண்டல்கள் ஏற்றி வந்த சரக்கு ரயிலில் 34 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பெட்டியிலும் தலா 130 புதிய சாக்கு பண்டல்கள் ஏற்றப்பட்டிருந்தது.

மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு, சரக்கு ரயில் இயக்கப்படுவதன் மூலம் , சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசாகவே தொழிலாளர்கள் மகிழ்கின்றனர். ரயில்வே துறையின் இத்தகைய சேவையின் மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சுமை தூக்கும் தொழிலாளர்கள், வணிகர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் பெறுவார்கள்.

53 ஆண்டுக்குப் பிறகு, சரக்கு ஏற்றி வந்த ரயிலை, மன்னார்குடி ரயில் நிலைய கண்காணிப்பாளர் மன்னை மனோகரன் , ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவர் கா.தமிழ்ச்செல்வம், மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் பொன். வாசுகி ராம், மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT