தமிழ்நாடு

கோவை, திருப்பூர் மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் தோ்வு: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் 

13th Nov 2020 01:24 PM

ADVERTISEMENT

 

கோவை, திருப்பூர் மாவட்ட திமுக இளைஞரணி அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். 

கோவை மாநகா் கிழக்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை மாநகா் மேற்கு, கோவை கிழக்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் கிழக்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய 9 மாவட்டங்களில் காலியாக உள்ள இளைஞரணி மாவட்ட அமைப்பாளா், துணை அமைப்பாளா்கள் பொறுப்புகளை நிரப்புவதற்கான நோ்காணல்  கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இதில், திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி, நேர்காணலில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடினார். இளைஞரணி நிர்வாகியாக நியமனம் செய்வதற்கான தகுதி உள்ளதா? என ஆய்வு செய்தார். இந்த நேர்காணலில், சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். 

ADVERTISEMENT

இதையொட்டி, திமுக இளைஞரணியின் செயல்பாடு மற்றும் கடந்தகால வரலாறு தொடர்பான கண்காட்சி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதை, உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். 

நேர்காணல் மற்றும் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் கார்த்திக் எம்எல்ஏ (கோவை மாநகர் கிழக்கு), பையா என்ற கிருஷ்ணன் (கோவை மாநகர் மேற்கு), சி.ஆர்.ராமச்சந்திரன் (கோவை புறநகர் வடக்கு), தென்றல் செல்வராஜ் (கோவை புறநகர் தெற்கு), சேனாதிபதி (கோவை புறநகர் கிழக்கு), திருப்பூர் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் மு.பெ.சாமிநாதன் (திருப்பூர் கிழக்கு), செல்வராஜ் (திருப்பூர் மாநகர்), பத்மநாபன் (திருப்பூர் வடக்கு), ஜெயராமகிருஷ்ணன்  எம்எல்ஏ (திருப்பூர் தெற்கு) மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் செய்தனர். 

இதைத்தொடர்ந்து, பெரியகடைவீதி பகுதி கழகத்திற்கு உள்பட கலைஞர் நற்பணி மன்றத்தின் பொருளாளராக இருந்த மறைந்த மோகன்ராஜின் குடும்பத்தினருக்கு, பகுதி கழக பொறுப்பாளர் மார்க்கெட் மனோகரன் தலைமையில், ரூ3,50,000 பணத்தை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Tags : DMK Youth Correspondents
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT