தமிழ்நாடு

தீபாவளி: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

13th Nov 2020 01:34 PM

ADVERTISEMENT


சென்னை: தீபவாளி திருநாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தியில், தீபாவளித் திருநாளானது அவநம்பிக்கையை வெல்லும் நம்பிக்கையாகவும், தீமையை வெல்லும் நன்மையாகவும், இருளை வெல்லும் ஒளியாகவும் திகழ்கிறது. மகிழ்ச்சியான இத்தருணத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளையும், நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் கொண்டாடப்படும் மிகச் சிறப்பான பண்டிகைகளில் தீபாவளித் திருநாளும் ஒன்றாகும். இத்திருநாள் நாடெங்கிலும் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நன்மையின் குன்றாத வலிமையையும், தீமையை வெல்லும் அதன் வல்லமையையும் கொண்டாடும் விழாவாக “தீபஒளித் திருவிழா”வான தீபாவளித் திருநாள் திகழ்கிறது.

வாய்மையும் அறமுமே இறுதியில் வெல்லும் என்பதை இத்திருநாள் எடுத்து இயம்புகிறது. இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்லவும், அறியாமையிலிருந்து மேலான அறிவை எய்தவும், மனச்சோர்விலிருந்து பேரின்பத்தை பெறவும் இந்நன்னாள் நமக்கு ஊக்கமளிக்கிறது. இத்திருநாள், நம்முடைய மாநிலத்திற்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சியையும் வளத்தையும் நல்லிணக்கத்தையும் அமைதியையும் நல்ல ஆரோக்கியத்தையும் வாரி வழங்கட்டும். நன்மை மற்றும் ஒளியின் வலிமை என்னென்றும் தழைத்தோங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : diwali tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT