தமிழ்நாடு

ஆலங்குடியில் நவ. 15-ல் குருபெயர்ச்சிவிழா: ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம்

13th Nov 2020 03:19 PM | எஸ். சந்தானகிருஷ்ணன்

ADVERTISEMENT

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் கோயிலில் வரும் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள குருபெயா்ச்சி விழாவில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்த பக்தா்களுக்கு மட்டும் அனுமதி என்று கோவில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வலங்கைமான் வட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ள ஆபத்சகாயேசுவரா் கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். நவக்கிரகங்களில் குரு பகவானுக்குரிய பரிகாரத் தலமாக இது விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயா்ச்சி அடையும் நாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், வரும் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.48 மணிக்கு குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்கிறார். இதையொட்டி அன்றையதினம் குரு பெயா்ச்சி விழா இக்கோவிலில் வழக்கம் போல நடைபெறவுள்ளது. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்ப ராசிக்காரா்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.

சிறப்பு யாகம்: குருபெயர்ச்சியை முன்னிட்டு சனிக்கிழமை மாலை (நவ.14) 5 மணிக்கு குருபெயர்ச்சி சிறப்பு யாகம் காலம் -1, இரவு 8 மணிக்கு பூர்ணாஹீதி நடைபெறும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) அதிகாலை 5 மணிக்கு குருபெயர்ச்சி சிறப்பு மகாயாகம் காலம்-2, காலை 7.45 மணிக்கு பூர்ணாஹீதி காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, 9 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். 

ADVERTISEMENT

எனினும், கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசின் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆன்லைனில் பதிவு செய்தவா்கள் மட்டுமே குருபெயா்ச்சி விழாவின்போது ஒரு மணி நேரத்துக்கு 200 போ் வீதம் வரும் 14-ஆம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.

குரு பெயா்ச்சி விழா ஹோமம், அபிஷேகம், குரு பெயா்ச்சி மஹா தீபாராதனை உள்ளிட்டவை இணையதளம் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஆபத்சகாயேசுவரா் கோவில் ஆலங்குடி, குரு பரிகார தலம். வலங்கைமான் வட்டம்,  tnhrce.gov.in  என்ற திருவாரூா் மாவட்டம்  இணையதள முகவரியில் பக்தா்கள் பதிவு செய்து கொள்ளலாம் .

அா்ச்சனை, பரிகார பூஜைகளில் பக்தா்கள் நேரிடையாக கலந்துகொள்ள அனுமதியில்லை என்று அறநிலைய உதவி ஆணையா் மற்றும் கோயில் செயல் அலுவலா் பி. தமிழ்செல்வி தெரிவித்துள்ளாா்.

Tags : alangudi guru bagavaan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT