தமிழ்நாடு

சார் பதிவாளர் அலுவலகத்தில் சமூக இடைவெளியின்றி அலைமோதும் மக்கள் கூட்டம்

11th Nov 2020 04:53 PM

ADVERTISEMENT

 

சூலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் புதன்கிழமை சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் அதிக அளவில் கூட்டமாகக் கூடினர். கூட்டத்தை ஒழுங்குபடுத்த சார் பதிவாளர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களைப் பதிவு செய்ய வருவோர் அதிக அளவில் கூடினர். கரோனா தொற்று நோய் பரவல் காலம் காரணமாக சார் பதிவாளர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். 

மேலும் அதிக அளவில் கூட்டம் கூடியதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவல்துறை உதவியை நாடினார். பொதுமக்கள் தொற்று நோய் அபாயம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாத பொதுமக்கள் ஒன்றாகக் கூடியதால் காவல்துறையினரை அழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT