தமிழ்நாடு

லோயர் கேம்பில் மின்சார உற்பத்தி குறைந்தது

11th Nov 2020 01:03 PM

ADVERTISEMENT

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் நீர்வரத்து குறைவின் காரணமாக மின்சார உற்பத்தி புதன்கிழமை குறைந்தது. 

முல்லைப் பெரியாறு அணையில் தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்தது.

புதன்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 123.35 அடி உயரமும், அணையில் நீர் இருப்பு 3,291 மில்லியன் கன அடியாக இருந்தது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 681 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,267 கன அடியாகவும் இருந்தது.

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் வெளியேற்றம் குறைவாக இருந்ததால், லோயர் கேம்பில் உள்ள மின்சார உற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி குறைந்தது.

கடந்த நவ. 6 ஆம் தேதி  லோயர் கேம்ப்பில் உள்ள நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் மூன்று மின்னாக்கிகள் மூலம் 122 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்றது.

தண்ணீர் வெளியேற்றம் குறைந்ததன் காரணமாக புதன்கிழமை லோயர் கேம்பில் உள்ள மின்சார நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது.

முதல் அலகில், 42 மெகாவாட், இரண்டாவது அலகில் 27 மெகாவாட், மூன்றாவது அலகில், 42 மெகாவாட் என மொத்தம் 111 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்றது.

Tags : Power generation is low Lower Camp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT