தமிழ்நாடு

கருவலூரில் மத வழிபாட்டுத் தல கட்டடம் அமைக்க எதிர்ப்பு

11th Nov 2020 03:53 PM

ADVERTISEMENT

 

அவிநாசி அருகே கருவலூர் இந்திரா நகர்ப் பகுதியில் வழிபாட்டுத் தலத்திற்கு கட்டடம் அமைக்கப் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்திற்கு உள்பட்ட கருவலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர்த்திருவிழாவிற்குத் தமிழகம், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். 

இந்நிலையில் கருவலூர் இந்திரா நகர்ப் பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் தனியார் இடத்தில் கொட்டகை அமைத்து, அனுமதியின்றி அமைக்கப்பட்ட  மத வழி பாட்டுத் தலத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் கொட்டகைக்கு அருகிலேயே கட்டடம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இதையறிந்த முனிஸ்வரா நகர், இந்திரா நகர், ஜோதி நகர், விக்னேஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்றத்தில் அனுமதி பெறாமல் வழிபாட்டுத் தலத்திற்காகக் கட்டடம் அமைக்கும் பணி நடைபெறுவதாகவும், இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்த வேண்டும் இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் பொதுமக்கள் அறிவித்திருந்தனர். 

ADVERTISEMENT

இந்நிலையில், இது குறித்த பேச்சுவார்த்தை கருவலூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் காவல் துறை, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர், வருவாய்த்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இருப்பினும் இக்கூட்டத்தில், மத வழிபாட்டுத் தலத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், இது குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் நவம்பர் 19ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அதுவரை கட்டுமானப் பணி தொடராமல் நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT