தமிழ்நாடு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 94.81அடியாக சரிவு

11th Nov 2020 08:47 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 95.21அடியிலிருந்து 94.81அடியாக சரிந்தது. 

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை வினாடிக்கு 9, 432கன அடியிலிருந்து 7348 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 58.32 டி.எம்.சி.யாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், செவ்வாய்க்கிழமை காலை 95.21அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 94.81அடியாகச் சரிந்தது.

Tags : Mattur Dam water level
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT