தமிழ்நாடு

ஐப்பசி திருவிழா: நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் திருக்கல்யாணம்

11th Nov 2020 07:58 AM

ADVERTISEMENT

 


திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோவிலின் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான விழா கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது.

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்கம் காரணமாக சுவாமி திருவீதி உலா தவிர்க்கப்பட்டு கோவில் வளாகத்திற்குள்ளேயே வழிபாடுகள் நடைபெற்றன. 

கோவில் நிகழ்வுகள் அனைத்தும் இத்திருக்கோவிலின் அலுவல்சார் யூடியூப் தளமான kanthimathi nellaiappar இல் தினமும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. 

திருக்கல்யாண திருவிழாவில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற தவசுக்காட்சி பாரம்பரிய முறைப்படி திருநெல்வேலி நகரம் காட்சிமண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்வாக திருக்கல்யாணம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Tags : Ippasi Festival Gandhimathi Amman
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT