தமிழ்நாடு

டான் டீ தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தி கூடலூர் எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்      

11th Nov 2020 12:04 PM

ADVERTISEMENT

  
டான் டீ தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தி கூடலூர் எம்.எல்.ஏ., தொழிலாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.  

இதுகுறித்து எம்.எல்.ஏ.திராவிடமணி கூறுகையில்,  நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள அரசு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தி நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. 

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள்.

ADVERTISEMENT

அதனால் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுடன் பந்தலூர் பஜாரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக எம்.எல்.ஏ.திராவிடமணி தெரிவித்தார்.

 

Tags : Gudalur MLA Fasting demand 20% bonus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT