தமிழ்நாடு

சுங்கச்சாவடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

11th Nov 2020 03:04 PM

ADVERTISEMENT

 

சுங்கச்சாவடி ஊழியர்கள் 20 சதவீதம் போனஸ் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து இரண்டு நாள் காத்திருப்பு போராட்டம் துவக்கியுள்ளனர்.

தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பு ஏஐடியுசி சார்பில் புதன்கிழமை சுங்கச்சாவடி ஊழியர்கள் 20 சதவீத போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வைத்து காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர். இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு ஏஐடியுசி மாநில துணைத்தலைவர் என் செல்வராஜ் தலைமை வகித்தார். கோவை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் பழனிசாமி சிறப்புரையாற்றினார். கணியூர் சுங்கச்சாவடி தொழிற்சங்க கிளை செயல் தலைவர் என் யுவராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கணியூர் கிளை செயலாளர் ஆர் சுரேஷ் துணைத்தலைவர் செல்லத்துரை பி முருகன் ஜி தட்சிணாமூர்த்தி சதீஷ்குமார் கிளை பொருளாளர் இலட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் மற்றும் சுங்கச்சாவடி பணியாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

கடந்த நான்காம் தேதி மதுரை மத்திய தொழிலாளர் துறை ஆணையர் சிவராஜன் முன்பு இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பு சார்பாக மாநில துணைப் பொதுச்செயலாளர் மணி கணியூர் கிளைத் தலைவர் யுவராஜ் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சார்பாக அதன் வழக்குரைஞர் இளங்கோவன், சுங்கச்சாவடி உதவி மேலாளர் கிஷோர் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் உடனடியாக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது தவறும்பட்சத்தில் நிர்வாகத்தின் மீது தொழிலாளர் துறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தொழிலாளர் துணை ஆணையாளர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இந்த நடவடிக்கையில் இருந்து தப்பும் வண்ணமாக ஒரு சிலருக்கு மட்டும் சில ஆயிரங்களை போனஸ் பணமாக கொடுத்து நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களின் வஞ்சிக்க நினைக்கிறது இதனை ஊழியர்கள் ஏற்க மாட்டோம் என கூறினர். இதன் ஒரு பகுதியாகவே 11 மற்றும் 12ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் துவக்கி உள்ளோம் எனக் கூறப்பட்டது. 

12ஆம் தேதி மாலைக்குள் போனஸ் குறித்து பேச்சுவார்த்தை துவக்கவிட்டால் பணி ஒத்துழைப்பு மறுப்பு போராட்டம் துவக்கப் போவதாக அறிவித்தனர். இதன்மூலம் சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பணம் வசூலிக்க போவதில்லை எனவும் அங்குப் பணி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT