தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை வாய்ப்பு

11th Nov 2020 12:22 PM

ADVERTISEMENT

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 

இதனிடையே தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில், தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் அடுத்த இரண்டு நாள்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

Tags : Rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT