தமிழ்நாடு

வெள்ளக்கோவிலில் விலைமதிப்புமிக்க ஐம்பொன் சிலை திருட்டு

10th Nov 2020 03:45 PM

ADVERTISEMENT

 

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் கோயிலின் பூட்டை உடைத்து 100 வருடங்கள் பழமையான விலைமதிப்புமிக்க ஐம்பொன் சிலை திருட்டுப் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளக்கோவில் காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைக்கிணறு அருகே ஒரு சமூகத்துக்குச் சொந்தமான அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் வெளிப்புற பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது செவ்வாய்க்கிழமை காலையில் தெரியவந்தது. இது குறித்து, வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கோயில் நிர்வாகிகள், காவல்துறையினர் சென்று பார்த்த போது கோயிலில் உற்சவருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையின் பீடத்தை உடைத்து அங்காள பரமேஸ்வரி ஐம்பொன் சிலை திருட்டுப் போனது தெரியவந்தது. இந்தச் சிலை நூறு வருடங்களுக்கும் முன்பு முன்னோர்களால் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது. 

24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலையில், கோயிலை ஒட்டி பெட்ரோல் பங்க், வீடுகள், கடைகள் உள்ள நிலையில் ஐம்பொன் சிலை திருட்டுப்போனது மனவேதனையைத் தருவதாகக் கோயிலைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

காவல்துறை உயரதிகாரிகள் முன்னிலையில், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT